Showing posts with label ஸ்பிட்சர். Show all posts
Showing posts with label ஸ்பிட்சர். Show all posts

Friday, October 9, 2009

நாசா அனுப்பிய ராக்கெட்கள் நிலவில் மோதின

நிலவில் மோதிய நாசா ராக்கெட்:-

வாஷிங்டன்: நாசா அனுப்பிய LCROSS (Lunar Crater Observation and Sensing Satellite) செயற்கைக் கோளுடன் இணைத்து அனுப்பப்பட்ட ராக்கெட்கள் நிலவின் தளத்தில் மோதியுள்ளன.

மொத்தம் 2 ராக்கெட்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில் மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.

முதலில் சென்டார் என்ற ராக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ராக்கெட் மோத விடப்பட்டது.

2000 கிலோ எடை கொண்ட அந்த ராக்கெட், மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் அசுர வேகத்தில் பாய்ந்து சென்று மோதியது.

இதையடுத்து ஷெபர்டிங் என்ற 2வது ராக்கெட் மோத விடப்பட்டது. முதல் ராக்கெட் மோதிய நான்கு நிமிடங்களில் 2வது ராக்கெட் மோத விடப்பட்டது. அதே கோணத்தில் இந்த ராக்கெட்டும் விடப்பட்டது.

நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஆய்வுக்காக எல்கிராஸ் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரயான்-1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் கவனம் நிலவின் மீது திரும்பியுள்ளது. எல் கிராஸ் அனுப்பும் திட்டத்தின் செலவு 100 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020வது ஆண்டில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான முக்கியத் தகவல்களுக்கும் இந்த எல்கிராஸ் திட்டம் உதவும்.

எல்கிராஸ் செயற்கைக் கோள், ஜூன் 18ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஷெபர்டிங் ராக்கெட்டில், அறிவியல் அதி நவீன சாதனங்களும், நவீன காமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு ராக்கெட்கள் மூலமும் நாசாவுக்கு பல்வேறு தகவல்கள் அனுப்பப்படவுள்ளன. அதை ஆய்வு செய்து நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது நாசா.

Thursday, October 8, 2009

சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம்

சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம்






சனிக்கோளைச் இதுவரை ஒரு போதும் அவதானிக்கப்படாத மிகப் பெரிய வளையம் நாசாவின் "ஸ்பிட்சர்' விண்வெளி தொலைக்காட்டி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


இது தொடர்பான தகவல்கள் "நேச்சர்' இதழில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.


சனிக்கோளின் ஏனைய வளையங்களில் இருந்து 27 பாகை(27 degrees) சரிவில் பனிக்கட்டி மற்றும் தூசுகளை உள்ளடக்கிய இந்த வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சனியின் நிலவான ஃபீபியில் (Phoebe) இருந்து பனிக்கட்டிகளையும் தூசையும் பெறுவதாகக் கருதப்படுகிறது. 316 பாகை பரனைட் அளவான தாழ்ந்த வெப்பநிலையிலுள்ள இந்த வளையமானது வெப்பக் கதிர்ப்பில் பிரகாசிக்கக் கூடியதாகும்.


எனினும் இந்த வளையம் இதுவரை எவராலும் அவதானிக்கப்படாமல் இருந்ததாக நாசாவின் ஆய்வுகூட பேச்சாளர் விட்னி கிளேவின் தெரிவித்தார். இந்த புதிய வளையமானது சனிக்கோளில் இருந்து 3.7 மில்லியன் மைல் தொலைவில் 7.4 மில்லியன் மைல் தொலைவிற்கு விரிவுபட்டதாக காணப்படுகிறது.


இந்த வளையம் ஒரு பில்லியன் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவில் பெரியதாகும். மேற்படி வளையம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சனியைச் சுற்றி "ஏ' முதல் "ஈ' வரை பெயர் சூட்டப்பட்டுள்ள 7 பிரதான வளையங்களும் அநேக மங்கிய வளையங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

"ஸ்பிட்சர்' விண்வெளி தொலைக் காட்டியை கொண்டுள்ள விண்கலமானது பூமியிலிருந்து 66 மில்லியன் தொலைவில் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.