Monday, April 5, 2010

Stop Using Google Buzz

கூகல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பஸ்ஸ் எனும் சோசியல் வசதியில் ஒரு மிகப்பெரிய தவறு இருந்ததை பஸ்ஸ் அறிமுகமான இரண்டாம் நாளே கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

என்ன தான் தவறு அது?

கூகல் பஸ்ஸ் என்பது ஒருவகையில் Orkut போன்ற ஒரு சோசியல் தளம் போன்றது. Twitter & Facebook போன்ற பிரபலமான தளங்களின் சில வசதிகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது தான் இந்த பஸ்ஸ்.

நீங்கள் யார் யாருக்கெல்லாம் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறீர்களோ அவர்கள் உங்களின் நண்பர்களாக பஸ்ஸ் இணைத்துவிடும். நீங்கள் உங்களின் மேல் அதிகாரி அல்லது நண்பர்களுடன் அதிகமாக சாட்டிங் செய்திருந்தால் அவர்களும் உங்களின் பஸ்ஸ் நண்பர்களாகி விடுவர்.

உங்களின் பஸ்ஸ் நண்பர்களின் முழு மின்னஞ்சல் முகவரி பிற அனைத்து பஸ்ஸ் நண்பர்கள் ஆனவருக்கும் தெரிந்துவிடும்.

பிரச்சனையின் தீவிரம் இப்போது உங்களுக்கு புரியலாம். பஸ்ஸ் உங்களின் அனுமதி கேட்காமலே உங்களுக்கு யார் எல்லாம் நண்பர்களாக இருக்கலாம் மற்றும் உங்களை யார் எல்லாம் நண்பராக்கிக் கொள்ளலாம் என தன்னிச்சையாக முடிவு எடுக்கும்.

அவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவித்துவிடும்.

பஸ்ஸ் ன் செயல்பாடுகளினை நிறுத்த, settings\buzz என்ற பக்கத்தை திறந்து “Disable Google Buzz” என்ற சிவப்பு நிற வாசகத்தை Click செய்து அடுத்து வரும் குறும் ஜன்னலில் Also unfollow me from anyone I am following in Buzz, Google Reader, and other Google products. என்பதை டிக் செய்து பின் “Yes, Delete My profile and posts” என்ற பட்டனை அழுத்தவும்.