ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம்.
ஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவர்களின் சர்வீஸை பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்த எனக்கு அவர்கள் செய்திருந்த ஒரு விஷயம் கடும் கோபத்தை ஏற்றிவிட்டது. என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்றை அழுத்து, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான்.
ஒரு கஸ்டமருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால்தான் போன் செய்யப்போகிறான் அப்படி பிரச்சனையை சொல்லவே காசு பிடுங்க ஆரம்பித்தால் என்ன நியாயம்?. பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதை விடக்கூடாது என்று மேற்கொண்ட காலை தொடர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஒரு கஸ்டமர் கேர் ஆள் லைனில் வர, எப்படி நீங்கள் சர்வீஸ் கால்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் அதுவும் உங்கள் நெட்வொர்க் போனிலிருந்து கூப்பிடும் போதே? என்று கேட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல் “ஆமாம் மாற்றி ஒரு மாதமாகிவிட்டது. “ என்றார் எதிர்முனை.
இது பற்றி நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்களா..? கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறீர்களே.. இதையும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி தொலைத்திருக்கலாமில்லையா..?” என்றேன் கோபத்தோடு. எதிர்முனை இன்னமும் அமைதியாய் “அறிவித்தாகிவிட்டது சார். பேப்பரில் சின்ன விளம்பரம் போட்டோமே..?” என்றார். எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது “புது ஆபர்.. விலை ஏறுகிறது என்றால் பத்து தடவை sms அனுப்புகிறீர்கள். இம்மாதிரியான விஷயஙக்ளுக்கு மகக்ளிடம் எதிர்ப்பு வரும் என்பதால் பேப்பரில் சின்ன விளம்பரமா..?” என்றதும் “சார். நாங்க டிராய்(TRAI - Telecom Regularity authority of India) கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் செய்யறோம்.” என்றார்.
எனக்கு இன்னும் பிரஷர் எகிறியது. டிராயின் ரூல்ஸ் என்ன தெரியுமா.? வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடய சர்வீஸிலோ, அல்லது அதற்கான பண விஷயமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு வாடிக்கையளர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறது என்று சொன்னதும். “இருங்க காலை என் ஆபீஸருக்கு மாற்றுகிறேன்” என்று என் லைனை ஹோல்ட் செய்யும் முன், “சார்.. 198 என்று ஒரு நம்பருக்கு போன் செய்தால் அதற்கு டோல் ப்ரீதான் என்றார்.
டிரான்ஸ்பர் செய்த கால் கட் செய்யப்பட்டது.இவர்களுடய சர்வீசை குறை சொல்ல எனக்கு செலவு. அடுத்து 198க்கு போன் செய்தால் எடுத்தவுடன் அவர்களும் ஆட்டோமேட்டட் வாய்ஸில் நம்பர் அழுத்த சொல்லி மேலும் விவரஙக்ளுக்கு 121 ஐ காண்டேக்ட் செய்ய சொல்கிறார்கள். மறைமுகமாய் மீண்டும் அதே நம்பருக்கு அழைக்கச் சொல்லி பணம் பிடுங்கவே முயல்கிறார்கள். அதையும் தாண்டி வெயிட் செய்து கஸ்டமர் கேர் ஆளிடம் பேசிய போது இது டோல் ப்ரீதான் சார். அந்த நம்பரை பற்றி பேச நீஙக் அந்த நம்பரில் போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்யுங்க்ள் என்றார். இங்கு பேசிய பிரகஸ்பதி.
எப்படியெலலாம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களை கேட்க ஆளேயில்லையா..? ஏற்கனவே இருக்கும் ஸ்கிமை விட இன்னும் குறைந்த விலையில் ஸ்கீம் மாற்றினாலும் நாமாக கேட்டாலே ஒழிய அவர்கள் சொலல் மாட்டார்கள். வந்த வரைக்கும் லாபம் தானே. இப்படி கொள்ளையடிப்பதையே வழக்கமாய் கொண்டவர்களூக்கு கஸ்டமர் கேருக்கு போன் செய்பவர்களுக்கு சார்ஜ் செய்துவிட்டால் பிறகு எவனும் போனே செய்ய மாட்டான். கேள்வி எதுவும் கேட்க மாட்டான், அப்படியே கேட்டாலும் காசு கட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப போன் செய்ய மாட்டான் என்று நினைக்கிறார்கள் போலும். இதை பற்றி ட்ராயும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.
என்னால் முடிந்த்து அதே ஏர்டெல் 121க்கு STOP CHARGING FOR CUSTOMER CARE என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறேன். இதுவரை ஒரு பத்து மெசேஜ் அனுப்பியுள்ளேன். நீங்களும் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளராய் இருந்தால் உடனே 121க்கு SMS அனுப்புங்கள். இது டோல் ஃப்ரி நம்பர் தான். ஏதோ என்னால் ஆன ஒரு சிறு எதிர்ப்பு.
மேலும் இது தொடர்பாக TRAI க்கு புகார் அனுப்ப,
http://www.trai.gov.in/ConsumerInterest.asp
என்ற id ஐ பயன் படுத்தவும்.
Disc:
1. பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆப்ரிக்கன் கம்பெனியை விலைக்கு வாங்கியது.
2. பாரதி ஏர்டெல் நிறுவன chairman சுனில் மிட்டல், இந்தியாவின் ஆறாவது கோடீஸ்வரர்.