Monday, October 24, 2011

அணுக்கழிவு மேலாண்மை

அணுக்கழிவு மேலாண்மை
--------------------------------------------------

அணுக்கழிவு :
----------------------
"அநேகமாக எல்லா அணுமின் நிலையங்களும் யுரேனியம் என்ற தனிமத்தை தான் எரிபொருளாக கொண்டுள்ளது. தோரியம் என்று இன்னொரு தனிமம் இருந்தாலும் ( நமது கோவளம் கடற்கரையில் கருப்பு நிறத்தில் காணப்படும் மண் ) அதனுடைய பிளவுபடும் வேகம் குறைவாக இருப்பதால் தோரியத்தை விட யுரேனியம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் 238 என்ற யு
ரேனியாத்தின் Isotope யை ஒரு Neutron கொண்டு பிளக்கும் போது யுரேனியம் 238 ( U238 ) சிதைவடைந்து U239 ஆக மாறுகிறது. தொடர்ந்து U239 சிதைவடைந்து Np -239 என்ற இடைப்பட்ட எரிபொருளாக மாறி பின் சிதைவடைந்து PU -239 ( ப்ளுட்டோனியம் 239 ) ஆக மாறுகிறது."

இந்த ப்ளுட்டோனியம் 239 தான் அணுக்கழிவு என்று அழைக்கப்படுகிறது.

அணுக்கழிவு மேலாண்மை :
இப்படி கிடைக்கும் அணுக்கழிவை எப்படி பாதுகாப்பது என்பது தான் அணுக்கழிவு மேலாண்மை என அழைக்கப்படுகிறது. இதற்காக அணுமின் நிலையங்களில் Waste Management என்று ஒரு விஞ்ஞானிகள் குழு இருக்கும். இந்த ப்ளுட்டோனியம் 239 பெரும்பாலும் நல்ல காரீய கொள்கலனுக்குள் ( காரீயம்
கதிர்வீச்சை வெளிவிடாது) சேமிக்கப்பட்டு மிகப்பெரிய Concrete கொள்கலனுக்குள் வைத்து பாதுகாக்கப்படும். 1 கிலோ எரிபொருளை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 10 கிராம் PU239 கிடைக்கும்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இவற்றை மறு சுழற்சி செய்கின்றனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இதை மறுசுழற்சி செய்யாமல் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ளனர்.

இந்தியாவின் அணுசக்தி திட்டம் : இந்தியா தற்பொழுது யுரேனியம் பயன்படுத்தி அணுமின்சாரத்தை ( 1st Stage ) தயாரிக்கிறது. நமது நாட்டில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இல்லாத காரணத்தினால் தற்பொழுது அவை மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.


ஆனால் இந்தியாவின் 2 ம் அணுசக்தி நிலை மிக அற்புதமானது. ஆம் 1st stage அணு மின் நிலையங்களில் மீந்திருக்கும் அணுகழிவான PU239 மற்றும் நமது நாட்டில் மிக வளமாக கிடைக்கும் தோரியம் ( கிட்டத்தட்ட 300000 டன் , உலகில் 3 ல் ஒரு பங்கு ) இரண்டையும் எரிபொருளாக பயன்படுத்தும். இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவே தயாரித்து அதை TEST REACTORS செய்து பயன்படுத்தியும் பார்த்துவிட்டது என்பது தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அதனால் தான் அமெரிக்கா தன்னுடைய 123 உடன்பாட்டில் " மறு சுழற்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் " என சொல்லுகிறது. ஆனால் இந்தியா அதற்காக போராடுகிறது என்பது நாம் அறிந்த விஷயம்.

இந்த 2nd stage அணு மின்சாரம் பயன்பாட்டிற்கு வரும்போது முதல் படியில் கழிவு என்று எப்படி இருக்க முடியும்..? மாத்திரமல்ல இப்பொழுது உள்ள NSG ( Nuclear Supplier Group ) பதிலாக இந்தியாவே ஒரு குழுமத்தை ஆரம்பித்து தோரிய அணு உலைகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யமுடியும். இது எப்படி வளர்ந்த நாடுகளால் பொறுக்க முடியும்.

அப்படியானால் 2nd stage அணுமின் நிலையங்களில் கழிவு / spend fuel கிடையாதா ?
உண்டு .. அந்த இரண்டாவது நிலை அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் PU239 + TH232 இவற்றில் இருந்து கழிவாக U233 கிடைக்கும்.இந்த U233 எரிபொருளாக AHWR என்ற Advanced Heavy Water Reactor ல் பயன்படுத்தப்படும். இந்த அணுமின் சக்தியில் கழிவாக PU239 மறுபடியும் கிடைக்கும்.

இந்த காரியங்கள் நடைபெறும் போது இந்தியா உலகில் யாரிடமும் கை ஏந்தாத பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த முதல் நாடாக மாறும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.


நன்றி : THE UPSIDE DOWN BOOK OF NUCLEAR POWER Written by Mr Saurav Jha ( Harper Collins publishers India )